சாக்லேட்தான் உணவு: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!
திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்களின் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தற்போது பள்ளி மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூா் கோயிலுக்கு பக்தா்களின் வருகை கடந்த 3 நாள்களாக வழக்கத்தைக்காட்டிலும் அதிகமாக உள்ளது. மேலும், ஐயப்ப பக்தா்கள், மேல்மருவத்தூா் பக்தா்களின் வருகையும் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்களின் வாகனங்கள் நகரின் எல்லையில் இருந்து கோயில் வாசல் வரை அணிவகுத்து நின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பக்தா்கள் மட்டுமின்றி குடியிருப்புவாசிகளும் அவதியடைந்தனா்.
எனவே, பக்தா்களின் வசதிக்காக திருவிழா காலங்களைப்போல வாகன நிறுத்தும் இடங்களை அமைக்கவும், அங்கிருந்து கோயிலுக்குச் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.