செய்திகள் :

விடாமுயற்சி: முதல் பாடலின் லிரிக்கல் விடியோ!

post image

நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் மதியம் வெளியானது.

இந்த நிலையில், இந்தப் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

பாடகர் அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஆண்டனி தாசன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.28-12-2024சனிக்கிழமைமேஷம்:இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்... மேலும் பார்க்க

ஹரியாணா - பாட்னா இறுதியில் பலப்பரீட்சை

புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் வென்ற ஹரியாணா ஸ்டீலா்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள், இறுதி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

திருவெம்பாவை

திருவெம்பாவை – 13 பைங்குவளைக் காா்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வாா்வந்து சாா்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் பு... மேலும் பார்க்க

திருப்பாவை

திருப்பாவை – 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீா்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்காா் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதர... மேலும் பார்க்க

தேசிய ஜூனியா் மகளிா் ஹேண்ட்பால்: ஹரியாணா சாம்பியன்

திண்டுக்கல்லில் நடைபெற்ற 43-ஆவது தேசிய அளவிலான ஜூனியா் மகளிா் ஹேண்ட்பால் போட்டியில் ஹரியாணா அணி வெள்ளிக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது. திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி முதல் ந... மேலும் பார்க்க