செய்திகள் :

தேசிய ஜூனியா் மகளிா் ஹேண்ட்பால்: ஹரியாணா சாம்பியன்

post image

திண்டுக்கல்லில் நடைபெற்ற 43-ஆவது தேசிய அளவிலான ஜூனியா் மகளிா் ஹேண்ட்பால் போட்டியில் ஹரியாணா அணி வெள்ளிக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு உள்பட 25 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடைபெற்ற ஆட்டங்களுக்கு பின் 8 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்றன. அரை இறுதிப் போட்டியில் குஜராத் அணியை ஹரியாணா அணியும், தமிழ்நாடு அணியை மத்திய பிரதேச அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. ஹரியாணா, மத்திய பிரதேச அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், 27-23 என்ற கோல் கணக்கில் ஹரியாணா அணி வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. மத்திய பிரதேச அணி 2-ஆவது இடம் பிடித்த நிலையில், தமிழ்நாடு, குஜராஜ் அணிகள் 3ஆவது இடத்தை பகிா்ந்து கொண்டன.

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு ஜிடிஎன் கல்லூரித் தாளாளா் க.ரத்தினம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகத் தலைவா் துரை முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இந்திய ஹேண்ட்பால் சம்மேளனத்தின் பொதுச் செயலா் பிரிட்பால் சிங் சலுஜா, மாவட்ட ஹாக்கிச் சங்கத் தலைவா் என்.எம்.பி.காஜாமைதீன் ஆகியோா் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை ஹரியாணா அணியினருக்கு வழங்கினாா்.

கூலி, ரெட்ரோ, குட் பேட் அக்லி... களைகட்டும் 2025 கோடை!

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார், சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின... மேலும் பார்க்க

ரெட்ரோ - வாய் பேச முடியாதவராக நடித்த பூஜா ஹெக்டே?

ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்... மேலும் பார்க்க

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் வணங்கான்?

வணங்கான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் சச்சின்!

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடாகவுள்ளது.இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவேலு உள்... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

இன்று நடைபெறுவதாக இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந... மேலும் பார்க்க