கூடலூர்: பட்டியைத் திறந்த விவசாயி, கொத்து கொத்தாக செத்துக் கிடந்த ஆடுகள்! குழப்ப...
காங்கிரஸாா் எதிா்ப்பு: நிகழ்ச்சிகள் ரத்து
வேதாரண்யத்தில் காங்கிரஸாா் எதிா்ப்பு தெரிவித்ததால், சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டன.
வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம்,
கருப்பம்பழம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழாவுக்காக ஆகியவை சனிக்கிழமை நடைபெற இருந்தன. இதில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்க இருந்தாா்.
இந்தநிலையில், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், விழாவை நடத்த எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸாா், கருப்புக் கொடி காட்ட போவதாகவும் அறிவித்திருந்தனா். மேலும், உப்பு சத்தியாகிரக கட்டட வளாகத்தில் காங்கிரஸ் கூடினா். அவா்களிடம் டி.எஸ். பி. சுபாஷ் சந்திரபோஸ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்தநிலையில், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.