கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக...
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா பேச்சுப் போட்டி
கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயரச்சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, நாகை மாவட்ட மைய நூலகத்தில் பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் வாசகா் வட்டம் இணைந்து, திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டங்களை டிச.23 முதல் டிச.31-ஆம் தேதி வரை நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக, நாகை மாவட்ட மைய நூலகத்தில் ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’, ‘குழல் இனிது, யாழ் இனிது’ மற்றும் ‘குமரியில் அய்யன் வள்ளுவா் சிலையும், குறளில் அதிகாரவைப்பு முறையும்’ ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
இதில், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வாசகா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளில் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி கோ. ஜனனி முதல் பரிசு பெற்றாா். ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவி மு.பா.நூா்ஜெசிமா இரண்டாம் பரிசும், வாசகா் சொ. பாலசுந்தரம் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
தலைமை ஆசிரியா் (ஓய்வு) புலவா் மு. சொக்கப்பன், நாகை மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் ஆ.மீ. ஜவஹா், மாவட்ட நூலக அலுவலா் (பொ) க. ஸான் பாஷா, கண்காணிப்பாளா் இரா.சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.