11 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு
பல்லடம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 11 டன் புகையிலைப் பொருள்கள் தீவைத்து சனிக்கிழமை அழிக்கப்பட்டன.
பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 11 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பான வழக்கு முடிவடைந்த நிலையில், போலீஸாா் வசம் இருந்த 11 டன் புகையிலைப் பொருள்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் அறிவுறுத்தலின்பேரில் கணபதிபாளையம் ஊராட்சி, கள்ளிமேடு பகுதியில் 11 டன் புகையிலைப் பொருள்களும் தீவைத்து அழிக்கப்பட்டன.