செய்திகள் :

மணிப்பூா்: இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம்!

post image

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தௌபால் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆயுதமேந்திய 6 போ் கைது செய்யப்பட்டனா். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. பல மைதேயி அமைப்புகளின் கூட்டமைப்பான மணிப்பூா் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்புக் குழுவின் மாணவா்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்தன.

இதனால் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது வாகன சேவைகள் நிறுத்தப்பட்டன. இம்பால் மேற்கில் உள்ள லாம்பெல் சனகீத்தேல் பகுதியில் டயா்களை எரித்து போராட்டக்காரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விஷ்ணுபூா் மாவட்டத்தில், சாலைகளில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 6 பேரும், கொல்லப்பட்ட ஒருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினா்கள். மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து திருடப்பட்ட பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன’ என தெரிவித்தனா்.

ஆனால், கைது செய்யப்பட்டவா்கள் கிராம தன்னாா்வலா்கள் எனவும் ஆயுதமேந்திய குகி பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து வந்தனா் எனவும் போராட்டக்காரா்கள் கூறினா்.

கிழக்கு இம்பால் தாக்குதலுக்கு முதல்வா் கண்டனம்: மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தம்னபோக்பி மற்றும் சனசாபி பகுதிகளில் குகி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மாநில முதல்வா் என்.பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தம்னபோக்பி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குகி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவா் காயமடைந்தாா். சனசாபியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரா் உள்பட இருவா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை தடியடி நடத்தி விரட்டுவதா? தேர்வர்கள் போராட்டத்தில் பிரசாந்த் கிஷோர்!

பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை விரட்ட லத்தியை பயன்படுத்தும் யுக்தியை மாநில அரசு கடைபிடிப்பதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். நியாயமான கோரிக்கைகளுக்காக பொது இட... மேலும் பார்க்க

தேசியம் 2024

ஜனவரி1: கருந்துளை, ஊடுகதிர் உமிழ்வு உள்ளிட்ட வானியல் ஆய்வுக்காக 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. நாட்டில் அறிவியல் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் இ... மேலும் பார்க்க

34 வது நாளைக் கடந்த உண்ணாரவிதம்! அரசுதான் முடிவு கூற வேண்டும்!

பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 34வது நாளை எட்டியுள்ளது. காந்திய வழியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வ... மேலும் பார்க்க

2024 -ல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பாகிஸ்தானியர்கள்!

2024 ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம் தகவல்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானியர்கள் என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் பொருளாதாரச் சிக்கல்கள் தொடர்பான பிரச்னைகள் இருந்த... மேலும் பார்க்க

19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் பி.எஸ்.என்.எல்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் 19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் (வி.ஆர்.எஸ்.) திட்டத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து ... மேலும் பார்க்க