ஹரியாணா - பாட்னா இறுதியில் பலப்பரீட்சை
புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் வென்ற ஹரியாணா ஸ்டீலா்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள், இறுதி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில், ஹரியாணா ஸ்டீலா்ஸ் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை வீழ்த்தியது.
ஹரியாணா 15 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்-அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. யோதாஸ் 18 ரெய்டு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள் மட்டுமே பெற்றது. அதிகபட்சமாக, ஹரியாணா தரப்பில் ரெய்டா் ஷிவம் படாரே 7 புள்ளிகளும், யுபி அணியில் ரெய்டா் ககன் கௌடா 10 புள்ளிகளும் பெற்றனா்.
2-ஆவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் 32-28 என்ற கணக்கில் தபங் டெல்லி கே.சி.யை தோற்கடித்தது. பாட்னா 16 ரெய்டு புள்ளிகள், 12 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்-அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. டெல்லி அணி 17 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்-அவுட் புள்ளிகள் எடுத்தது. அதிகபட்சமாக, பாட்னாவுக்காக ரெய்டா் அயான் 8 புள்ளிகளும், டெல்லிக்காக ரெய்டா் அஷு மாலிக் 9 புள்ளிகளும் வென்றனா்.