செய்திகள் :

`குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால்..!' - ஓர் ஓவிய பயணம்

post image

குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால் எப்படி இருக்கும்? அதுதான் `மாஸ்டர் டிசிப்ளீன்' என்ற ஓவியக் கண்காட்சி. ஓவியர் விஜயகாந்த் மற்றும் பாரதிராஜாவும் தங்களுடைய குருமார்களான ஓவியர் திருநாவுக்கரசர் மற்றும் கிருபானந்தமுடன் இணைந்து இந்த ஓவியக் கண்காட்சியை வைத்திருக்கிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஆர்ட் ஹவுஸில் இந்த ஓவியக் கண்காட்சி டிசம்பர் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

உள்ளே நுழைந்ததும் பல வண்ணங்களிலான கான்வாஸ் ஓவியங்கள் இனிமையாக அனைவரையும் வரவேற்றது. ஒரு புறம் அனைத்து ஓவியங்களிலும் சேவல்கள் வெவ்வேறு வண்ணங்களில் காட்சியளித்தன. மற்றொரு பக்கம் வடிவியலில் மாற்றம் கொண்ட மாடுகளின் ஓவியமும் கவனம் ஈர்த்தது. இதனை ரசித்துக் கொண்டே நகரும்போது ரசனையினால் உதட்டோரத்தில் புன்முறுவல் மலர்ந்தது. ஆர்வத்தை அறிந்துக் கொண்டு அடுத்த நொடியே அந்த ஓவியங்கள் குறித்து ஒவ்வொரு விஷயங்களையும் ஓவியர்கள் பாரதிராஜா, விஜயகாந்த், கிருபானந்தம் என மூவரும் அழகாக எடுத்துரைக்க தொடங்கினார்கள்.

பாரதிராஜா, விஜயகாந்த், திருநாவுக்கரசு, கிருபானந்தம்

`` நாங்க கல்லூரி படிப்பை தொடங்குறதுக்கு முன்பு இருந்தே எங்களுக்கு திருநாவுக்கரசு சாரும், கிருபானந்தம் சாரும் வழிகாட்டியாக இருக்கிறாங்க. 2002 முதல் தொடர்ந்து எங்க குருமார்கள் எங்களை வழிநடத்துறாங்க. இப்போ இந்த குரு சிஷ்யன் இருவரும் சேர்ந்து வைத்திருக்கும் இந்த ஓவியக் கண்காட்சி அனைத்து குருமார்களுக்கும் சிஷ்யர்கள் கொடுக்கிற மரியாதையாகதான் பார்க்கிறோம். கலை பண்பாட்டுத் துறை உதவியுடன் இப்போ இந்த ஓவியக் கண்காட்சியை நடத்துறோம். " என விஜயகாந்த் எடுத்துரைத்ததும்,

பேச தொடங்கிய பாரதிராஜா, `` இந்த கண்காட்சியை நடத்துறதுக்கு குருமார்கள் இருவரும் முதல்ல அனுமதிச்சதே பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். குருமார்களைப் போல நம்மளும் நல்ல ஓவியங்கள் பண்ணனும்னு ஒரு ஆரோக்கியமான போட்டி மனநிலை எங்களுக்குள்ள இருந்துச்சு. ஒரு பக்கம் சுவாரஸ்யமாக இந்த விஷயம் இருந்தாலும் கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது. " என்றார்.

பேசி முடித்ததும் ஒவ்வொரு பக்கமாக ஓவியத்தை பார்ப்பதற்கு விரைந்தோம். சேவல்கள் நிறைந்திருக்கும் பகுதியை அடைந்ததும் அந்த சேவல் ஓவியங்களை வரைந்த பாரதிராஜா விளக்கமளிக்க தொடங்கினார். அவர், `` சேவலுக்கும் எனக்கு நீண்ட நெடிய தொடர்பு இருக்கு. என்னுடைய சின்ன வயசுல எங்க வீட்டுல அதிக எண்ணிக்கையிலான சேவல்கள் இருக்கும். ஒரு நாள் எங்க வீட்டுல இருந்த ஒரு சேவல் இறந்துடுச்சு. அந்த சேவல் இறந்த ஒரு மணி நேரத்தில எங்க அக்கா இறந்தாங்க.

ஓவியர் பாரதிராஜா

அந்த விஷயம் எனக்குள்ள ரொம்ப நாட்களாக ஓடிட்டே இருந்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு சேவல்களை அதிகமாக கவனிக்க தொடங்கினேன். அதனுடைய வண்ணங்களும் என்னை ஈர்த்தது. எல்லோரும் ஒரு சேவலுக்கு இரைக் கொடுக்கும்போது நான் அதனுடைய நடத்தைகளை கூர்ந்து கவனிப்பேன். சில சேவல்களுக்கு வால் ரொம்பவே நீளமாக இருக்கும். அந்த வால்களைக் கொண்ட சேவல்கள் பறக்கும்போதும் பார்க்கிறதுக்கு அழகாக இருக்கும். அப்படியான விஷயங்களையும் கவனிச்சு இந்த ஓவியங்களைப் பண்ணியிருக்கேன்." என சேவல் குறித்து நாம் கேட்டிராத விஷயத்தை அவ்வளவு எளிமையாக எடுத்துரைத்தார்.

இதன் பிறகு மாடுகள் கூட்டமாக நகர்ந்து செல்லும் ஓவியங்கள் இருந்தது. ஆனால், அந்த பக்கத்திற்கு கவனம் திருப்பியதற்கு காரணம் அந்த மாடுகளின் வடிவம்தான். மாடுகளின் முகம் மற்றும் உடல் மிகவும் கூர்மையான முடிவுகளைக் கொண்டிருந்தது. அது குறித்து விளக்கமளிக்க தொடங்கிய அந்த ஓவியங்களின் ஓவியர் கிருபானந்தம், `` நான் பார்த்த மாடுகளை அப்படியே கொடுக்காமல் நான் கற்று வைத்த வடிவங்களின் வழியாக அந்த ஓவியத்தை கொடுக்கணும்ங்கிற வெளிபாடுதான் இதெல்லாம். இந்த ஓவியங்களைப் பார்க்கிறவங்க சும்மா அப்படியே கடந்து போய்விடக்கூடாதுங்கிறதுதான் என்னுடைய எண்ணம். அவங்க பார்க்கிற இந்த ஓவியங்கள் அவங்களுக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்தணும். இப்போ யாரவது என்னுடைய ஓவியம் ரியலிஸ்டிக்காக இருக்குனு சொல்லிட்டால் எனக்குள்ள அந்த விஷயம் ரொம்ப உறுத்தும். அந்த விஷயம் எனக்கு பாராட்டாக நான் எடுத்துக்கமாட்டேன்!'' என்றார்.

ஓவியர் திருநாவுக்கரசு

இந்த இரண்டு பக்க ஓவியங்களை தாண்டி மற்றொரு பக்கத்தில் ஒரு பெண் கையில் ஒரு வீணையை ஏந்திக் கொண்டே பரதம் ஆடுவது போன்ற ஓவியம் இருந்தது. வீணையின் கனத்திற்கு எப்படி இது சாத்தியமாகும் என யோசித்துக் கொண்டிருக்கும்போது சிரித்துக் கொண்டே வந்து பதிலளித்த ஓவியர் விஜயகாந்த், ``இதெல்லாம் நான் சின்ன வயதுல பார்த்த விஷயங்களோட வெளிப்பாடுதான். ஊர் திருவிழாக்கள்ல பலர் அவங்க போட்டிருக்கிற உடையுடனே சட்டுனு நடனமாடுவாங்க கூர்ந்து கவனிச்சா ஓவியத்துல பரதம் ஆடுற பெண்ணும் ஆடம்பரம் இல்லாத சாதாரண உடையை அணிந்திருக்கிற விஷயம் தெரியும். வீணையின் ஒலி தனித்துவமானதாக நான் நினைக்கிறேன். அந்த ஒலி என் காதுகளுக்கு ஒரு இனிமையான உணர்வை கொடுக்கும்!'' என்றார்.

இறுதியாக ஓவியர் திருநாவுக்கரசுவின் `Abstract' வடிவ ஓவியங்கள் பல வண்ணங்களில் கவர்ந்தன. அந்த ஓவியங்களும் பலவற்றையை வெளிப்படுத்தும் கதை சொல்லியாக காட்சியளித்தது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Zakir Hussain: உலகப் புகழ் தபேலா வித்வான் ஜாகீர் உசைன் காலமானார்

தபேலா வித்வான் ஜாகீர் உசைன் காலமானார்.73 வயதான இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதயம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டு சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஒர... மேலும் பார்க்க

'வேதாள ஆட்டம், உச்ச மகுடம், மந்த மகுடம்...' - பழங்குடியினரின் கணியான் கூத்து பற்றித் தெரியுமா?

தமிழர்களின் மரபில் நாட்டுப்புறக் கலைகளுக்கென்று எப்போதும் ஒரு தனி இடமுண்டு. அப்படியிருக்க நாட்டுப்புறக் கலை என்றாலே நம் நினைவிற்கு வருவதென்னவோ மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவைதான். ஆனால் நமக்... மேலும் பார்க்க

Filmfare OTT 2024 : `ரஹ்மானுக்கு இரண்டு விருது' - ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ஓ.டி.டி படைப்புகள்!

2024-ம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருது விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2020-ம் ஆண்டு கொரோ... மேலும் பார்க்க