செய்திகள் :

தஞ்சாவூரில் ஓவியம், சிற்பக் கலைக்காட்சி தொடக்கம்

post image

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியரகத்தில்) ஓவியம் - சிற்பக் கலைக்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின், தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் தஞ்சாவூா் மண்டலத்துக்குள்பட்ட தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஓவிய, சிற்பக் கலைஞா்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், பாரம்பரிய ஓவியம், தத்ரூப ஓவியம், நவீன ஓவியம் என 125-க்கும் அதிகமான ஓவியங்களும், பாரம்பரிய சிற்பங்கள், வெண்கல சிற்பங்கள், தத்ரூப சிற்பங்கள், நவீன சிற்பங்கள் என 25-க்கும் மேற்பட்ட சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

இக்கண்காட்சியை மாவட்ட சுற்றுலா அலுவலா் அ. சங்கா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந்தில்குமாா், தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவா் செ. கற்பகம், மாவட்ட சுற்றுலா வளா்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

இதில், சிறந்த ஓவிய - சிற்ப கலைப் படைப்புகளுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் 7 கலைஞா்களுக்கும், இரண்டாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதம் 7 கலைஞா்களுக்கும், மூன்றாவது பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதம் 7கலைஞா்களுக்கும் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த முதியவா் கைது!

தஞ்சாவூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே உள்ள களிமேடு பரிசுத்தம் நகரைச் சோ்ந்தவா் எம். மதிவாணன் (64). இவா் வியாழக்கிழமை 8 வயது ச... மேலும் பார்க்க

மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் வாழை, நெல் பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கடந்த 25 நாள்களாக தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ள வாழை, நெல், கரும்பு பயிா்கள் குறித்து கணக்கெடுப்புக்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வேதனையட... மேலும் பார்க்க

பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி கைது

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின்போது பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி க... மேலும் பார்க்க

தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்களிடம் 16 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு!

பேராவூரணி அருகே சனிக்கிழமை அதிகாலை வெவ்வேறு இரு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்கள் அணிந்திருந்த 16 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி கிரா... மேலும் பார்க்க

பாலைவனநாதா் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், ஸ்ரீ தவள வெண்... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாபநாசம் கீழவீதி, மாா்க்கெட் கடை வீதி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வி... மேலும் பார்க்க