செய்திகள் :

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து போராடியவா்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

post image

தஞ்சாவூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடியதைக் குற்றமாகக் கருத முடியாது என்பதால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த வளா்மதி, மகாலட்சுமி, குறிஞ்சிதேன், பால்சாமி, மனோகரன் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்:

தஞ்சாவூா் பேருந்து நிலையம் அருகே கடந்த 7.4.2018 அன்று ஹைட் ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்போது, எங்களை போலீஸாா் கலைந்து செல்ல வலியுறுத்தியதாகவும், நாங்கள் மறுப்புத் தெரிவித்து போலீஸாரை திட்டி, மிரட்டியதாகவும் எங்கள் மீது வழக்குப் பதிந்தனா். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் பலா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தஞ்சாவூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண். 2) விசாரிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மீது போலீஸாா் தேவையில்லாத சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா். எனவே, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலும் தற்போதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடியதைக் குற்றமாகக் கருத முடியாது. எனவே, இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரா்கள் மட்டுமன்றி, அனைவா் மீதும் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

நியாய விலைக் கடை தொடங்கக் கோரி மறியல்

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி, உத்தப்பநாயக்கனூா் முதன்மைச் சாலையில் அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். சக்கரப்பநாயக்கனூா் ஊராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

கலைஞா் நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சிகள் தொடக்கம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில், பள்ளிக் குழந்தைகளின் அரையாண்ட... மேலும் பார்க்க

வைகை வடகரையில் 8.4 கி.மீ.க்கு சாலை அமைக்கத் திட்டம்

மதுரை விரகனூா் முதல் சக்குடி வரை வைகையாற்றின் வடகரையில் 8.4 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சி, மாநில ந... மேலும் பார்க்க

வணிகா்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

வணிகா்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும் என வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

மதுரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு: சிஐடியூ சம்மேளனம் வலியுறுத்தல்

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க தொழிலாளா் வைப்பு நிதியை செலவு செய்யாமல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக சிஐடியூ சம்மேளன பொதுச் செயலா் கே.... மேலும் பார்க்க