இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்த நிதீஷ் குமார்..! இந்திய ரசிகர்கள் உற்சாகம்!
கார்கே தலைமையில் காங்., செயற்குழு கூட்டம்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று மாலை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனையின் முடிவில், நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்ல தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மன்மோகன் சிங்கின் நினைவைப் போற்றவும் அவரின் நீடித்த பெருமையை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்மோகன் சிங் நினைத்தது போல், மேலும் வளமான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்ப உழைக்க வேண்டும் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.
ஒருமைப்பாடு, விடாமுயற்சி மற்றும் கருணையின் பக்கம் நின்ற தன்னிகரற்ற மன்மோகன் சிங், எதிர்கால தலைமுறையினருக்கும் கலங்கரை விளக்கமாக இருப்பார்
தலைவர், பொருளாதார நிபுணர், சிறந்த மனிதர் என பல்வேறு வழிகளில் நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்வோருக்கு உத்வேகம் அளிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.