செய்திகள் :

2024-ல் கடல்வழியாக ஸ்பெயின் வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்ட அகதிகள் பலி!

post image

2024-ல் மட்டும் ஸ்பெயின் நாட்டிற்கு கடல்வழியாக புலம்பெயர்ந்து வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஸ்பெயின் இடப்பெயர்வு உரிமைகள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் தொடர் வன்முறைகள் மற்றும் மோதல்களிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ்க்கையைத் தேடி ஐரோப்பாவிலுள்ள ஸ்பெயின் நாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்தாண்டில் (2024) மட்டும் வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மூரித்தானியாவின் துறைமுகங்களிலிருந்து படகுகள் மூலம் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள கேனரி தீவுகளுக்கு பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

இதில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத நாட்டுப் படகுகளின் மூலம் பயணிப்பதனால் கடலில் நடுவழியில் விபத்துக்குள்ளாகி கடல் நீரில் மூழ்கி ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் உயிரிழந்து விடுகின்றனர்.

இதுகுறித்து நேற்று (டிச.26) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பான கேமினாண்டோ ஃப்ரோண்டெராஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: மொராக்கோ கடலில் அகதிகள் படகு மூழ்கியது! 69 பேர் பலி!

இந்த அறிக்கையில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து டிச.15 வரையிலான காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சென்றடையும் நோக்கில் மிகவும் ஆபத்தான அட்லாண்டிக் கடல்வழியாக புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களில் சுமார் 10,457 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 1,538 குழந்தைகளும், 421 பெண்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் யாவும் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் அந்த விபத்துகளில் மீட்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் நாளொன்றுக்கு 30 பேர் ஸ்பெயினை நோக்கிய பயணத்தில் பலியாகின்றார்கள். இது கடந்த ஆண்டைவிட 58 சதவிகிதம் அதிகம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த டிச. 15 ஆம் தேதி வரை 57,700 பேர் ஸ்பெயின் நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகம் எனவும் ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் பெரும்பாலானோர் அட்லாண்டிக் கடல் வழியாக பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் நினைவு நாள்: அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) அவரது நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார்.விஜயகாந்த் நினைவு நாளை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமு... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது!

கொல்கத்தாவில் போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்து நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தின் நராய்ல் மா... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கம் விலை இன்று (டிச. 24) சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், செ... மேலும் பார்க்க

அடுத்த 1 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ், சீமான் அஞ்சலி!

விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொ... மேலும் பார்க்க

தேனி அருகே கோர விபத்து: 3 பேர் பலி, 18 பேர் காயம்

தேனி: தேனி அருகே ஏற்காடுக்கு சுற்றுலா சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளம் மாநிலம், கோட்டயைத... மேலும் பார்க்க