செய்திகள் :

2024 - பிரபலங்களின் திருமணங்கள்!

post image

திருமண பந்தத்தில் இந்த ஆண்டும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். ஏனோ பெரும்பாலான பிரபலங்கள் காதல் திருமணத்தையே விரும்புகிறார்கள்.

அதுபோலவே இந்த ஆண்டும் பிரபலங்கள் பலர் காதல் திருமணம் செய்துகொண்டனர். சொல்லப் போனால், நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரபல வாரிசு ஒருவரின் மகனுக்கு நடைபெற்ற திருமணம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ஏன், நாட்டில் அப்படி ஒரு திருமணம் இதுவரை நடைபெற்றதில்லை என்றும்கூட சொல்லலாம்.

உள்ளூர் கோடீஸ்வரர் மட்டுமின்றி உலக கோடீஸ்வரர்கள் வரை அத்தனை பேரும் அந்த திருமணத்திற்காக இந்தியா வந்திருந்தனர்.

ஆசிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம்தான் அது. இதுதவிர சோனாக்ஷி சின்ஹா, நாக சைதன்யா - சோபிதா துலிபாலா, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி என பல பிரபலங்களும் திருமணம் புரிந்துகொண்டனர்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சன்ட்

ஆசியாவின் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சன்ட் தம்பதிக்கு மும்பையில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி பெரும் பொருள் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்காக ஆட்டம், பாட்டம் என மும்பை நகரமே விழா கோலம் பூண்டிருந்தது. இதில் உலகளவிலான பிரபல திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்கள், தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சன்ட்

திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளில் இருந்து திருமணம் முடியும் வரை செலவிடப்பட்ட தொகை ரூ. 5,000 கோடியைத் தாண்டிவிட்டதாக கூறுகின்றனர். இது இங்கிலாந்து இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ் திருமணத்துக்கு ஆன செலவைவிட அதிகமாம். திருமணத்தில் பங்கேற்ற தனது நண்பர்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள கைக் கடிகாரங்களை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கினார்.

சோனாக்ஷி சின்ஹா ​​- ஜாகீர் இக்பால்

இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டில் டபாங் படத்தின் மூலம் 2010-ல் நாயகியாக அறிமுகமானவர். தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தன் நீண்ட நாள் காதலரான நடிகர் ஜாகீர் இக்பாலை கடந்த ஜூன் 23 ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால்

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். தொடர்ந்து மும்பையில் நடந்த திருமண வரவேற்பில் சாய்ரா பானு, ரேகா, சல்மான் கான், வித்யா பாலன் மற்றும் சித்தார்த் ராய் கபூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சோனாக்ஷி சின்ஹா, ஜாகீர் இக்பால் இருவரும் டபுள் எக்ஸ்எல் (Double XL) திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்திருந்தனர்.

நாக சைதன்யா - சோபிதா

நாகார்ஜுனா மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாகக் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா

பிறகு நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவைக் காதலித்தார். இருவரது திருமணமும் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது.

முன்னதாக நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி

இயக்குநர் சங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் நடிகர் சித்தார்த் அறிமுகமானார். பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆயுத எழுத்து’ படத்தில் நாயகனாக நடித்தார். இவர், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் இவர், 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து நடித்தார். அதுமுதல் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி

தொடர்ந்து சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி திருமணம் கடந்த செப்டம்பரில் தெலங்கானா மாநிலம், ஸ்ரீரங்கபூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் மணமக்களின் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் - நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்ததில் பிரபலமானார். பிறகு விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னிணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார். இவருடைய திருமணம் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கோவாவில் நடந்து முடிந்தது.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்

15 ஆண்டுகளாக தான் காதலித்து வந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை அவர் கரம்பிடித்தார். முதலில் ஹிந்து முறைப்படியும், அதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடந்தது. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய், திரிஷா என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

நல்ல நண்பர்களாக தொடங்கி பின்னர் காதலர்களாக மாறி தற்போது மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

டாப்ஸி - மத்யாஸ் போயே

தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. பின்னர் ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’, ஷாருக் கானுடன் டங்கி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போயேவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

டாப்ஸி - மத்யாஸ் போயே

இவர்களது திருமணம் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி உதய்பூரில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடிகை டாப்ஸியின் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாப்ஸியின் திருமணத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப், கனிகா தில்லன் உட்பட நெருங்கிய பாலிவுட் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கடந்த 2020ம் ஆண்டு பேட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற மத்யாஸ் போயே தற்போது பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஐரா கான் - நுபுர் ஷிகாரே

பாலிவுட்டின் மெகா ஸ்டார் ஆமிர் கானின் மூத்த மனைவி ரீனா தத்தாவின் மகள் ஐரா கான். இவர் தனது காதலரான, நுபுர் ஷிகாரேவை கடந்த ஜனவரி 4ஆம் தேதி மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்டில் பதிவுத் திருமணம் செய்தார்.

ஐரா கான் - நுபுர் ஷிகாரே

தொடர்ந்து, இவர்களது திருமணம் கிறிஸ்துவ முறைப்படி உதய்பூரில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிகழ்வில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சல்மான் கான், ஷாருக்கான், ரன்பீர் கபூர், கங்கனா ரணாவத், ஹேமமாலினி, சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தாரைதப்பட்டை, யசோதா, மத கஜ ராஜா, விஜய்யுடன் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ்

மேலும் அண்மையில் வெளியான புஷ்பா 2 படத்திலும் வில்லி வேடத்தில் அசத்தியிருப்பார். வரலட்சுமிக்கும், தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் மார்ச் 1 ஆம் தேதி திருமண நிச்சயம் நிகழ்ந்தது. பின்னர் வரலட்சுமியின் திருமணம் ஜூலை 2 ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

ஐஸ்வர்யா - உமாபதி

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு சினிமா பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

ஐஸ்வர்யா - உமாபதி

இவரும், பிரபல நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து, இந்த ஜோடிக்கு கடந்த ஜூன் 10 ஆம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சனேயர் கோயிலில் திருமணம் நடந்து முடிந்தது.

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் மீன்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரும், மாடல் அழகி தாரிணி காலிங்கராயர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி

பின்னர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காளிதாஸ் ஜெயராம், தாரிணி இருவருக்கும் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இன்னும் நிறைய பிரபலங்கள் காதலித்துக் கொண்டிருக்கும் செய்திகள் அச்சிலும் இணையங்களிலும் கிசுகிசுக்களாக வந்துகொண்டிருக்கின்றன. 2025-ல் எத்தனை காதல்கள், திருமணங்களில் முடியுமோ? எத்தனை காதல்கள் கிசுகிசுக்களாகவே முடியுமோ? பார்த்திருக்கலாம்.

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10. மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர... மேலும் பார்க்க

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் ச... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைய... மேலும் பார்க்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் பெரிய அணை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை! -சீனா

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில்... மேலும் பார்க்க

எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்துவிட்டாா்! பாகிஸ்தானில் மன்மோகன் பிறந்த கிராமத்தில் உருக்கம்

காஹ் (பாகிஸ்தான்): ‘எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்ததைபோல் உணா்கிறோம். ஒட்டுமொத்த கிராமமே கவலையில் மூழ்கியுள்ளது’ என மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தானில் உள்ள காஹ் கிராம மக்கள் இரங்கல் தெரிவித்தனா். மு... மேலும் பார்க்க

நாட்டை மீட்ட பட்ஜெட்: காங்கிரஸாரின் எதிா்ப்பை சந்தித்த மன்மோகன் சிங்!

இந்தியாவை கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட மத்திய பட்ஜெட்டை கடந்த 1991-ஆம் ஆண்டு நிதியமைச்சராக மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிலையில், அந்த பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் கட்சியினரே எதிா்ப்புத் தெர... மேலும் பார்க்க