செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: ``திமுக யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது? வழக்கை CBI-க்கு..." - இபிஎஸ்

post image
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரன் ஆளும் திமுகவில் பொறுப்பில் இருப்பவர் என்ற பேச்சுகள் அடிபடும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIR-ஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை இத்தனை நாள்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு தி.மு.க அரசின் காவல்துறையே முழு பொறுப்பு! ஞானசேகரன் தி.மு.க உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் தி.மு.க-வின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான தி.மு.க நோட்டிஸ், முரசொலி நாளேடு செய்தி உள்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது? ஆளுங்கட்சியான தி.மு.க-வில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது. FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

யார் அந்த நபர்? #யார்_அந்த_SIR ? யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த தி.மு.க அரசு? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஸ்டாலின் அரசின் பொறுப்பு! இனி இந்த வழக்கை தி.மு.க அரசின் காவல்துறை விசாரிப்பதற்குத் தார்மீகத் தகுதியில்லை! எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Manmohan Singh: `திடீர் உடல் நலக்குறைவு; காலமானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்'

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.Manmohan Singhமன்மோகன் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார். அதேமாதிரி, 90 களில் நிதிய... மேலும் பார்க்க

விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்... மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற்றச்சாட்டு ஏன்?

மதுரை கலெக்டர் தங்களை அவமதித்து விட்டதாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் குற்றச்சாட்டியுள்ளது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் போராட்டம்திருமாவளவ... மேலும் பார்க்க

``ஆண்டுக்கு ரூ.2.5 கோடி லாபம் கிடைக்குது..'' -உருளைக்கிழங்கு சாகுபடியில் ஜெயித்த பட்டதாரி விவசாயி

வேளாண் துறையில் பட்டப்படிப்புவிவசாயம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் பஞ்சாப் போன்ற சில மாநிலங்களில் விவசாயத்தை தங்களது தொழிலாக விருப்பத்துடன் சிலர் செய்து கொண்டிருக்கின்றனர். பஞ்சாப் மா... மேலும் பார்க்க

``நெஞ்சைப் பதற வைக்கிறது...'' - அண்ணா பல்கலைக்கழகம் மாணவி சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் நேற்று பரபரப்பை கிளப்பியது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், எப்.ஐ.ஆரில் அந... மேலும் பார்க்க

Doctor Vikatan: எந்த Blood Group யாருக்குப் பொருந்தும்... தவறுதலாக ஏற்றினால் பிரச்னையா?

Doctor Vikatan: ரத்த தானம் செய்யும்போதோ, யாருக்கேனும் ரத்தம் ஏற்றும்போதோ, எந்த blood group யாருக்குப் பொருந்தும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது... ஒருவேளை பொருந்தாத ரத்தப் பிரிவை மற்றவருக்கு ஏற்றிவிட... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்டென்ட், பைபாஸ் தேவையில்லையா... இதய நோயாளிகளைக் காப்பாற்றுமா EECP சிகிச்சை?

Doctor Vikatan: 'உங்களுக்கு நெஞ்சுவலி உள்ளதா, மூச்சுத்திணறல் உள்ளதா, ஆஞ்சியோபிளாஸ்டியோ, அறுவை சிகிச்சையோசெய்து கொள்ள பயமா... தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஈஈசிபி (EECP ) சிகிச்சையைச் செய்துகொள்ள எங்க... மேலும் பார்க்க