பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
``நெஞ்சைப் பதற வைக்கிறது...'' - அண்ணா பல்கலைக்கழகம் மாணவி சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் நேற்று பரபரப்பை கிளப்பியது.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், எப்.ஐ.ஆரில் அந்தப் பெண்ணின் பெயர் பதியப்பட்டுள்ளது என்றும், அந்த எப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் இன்று காலை முதல் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று பதிவிட்டுள்ளார்.