அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆா்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆா்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் அகில இந்திய பல்கலை. ஆடவா், மகளிா் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது நாளான வியாழக்கிழமை போட்டி முடிவுகள்:
100 மீ. பேக்ஸ்ட்ரோக்:
ஆடவா்: 1. ஸ்ரீஹரி நட்ராஜ், ஜெயின் பல்கலை, பெங்களூரு, 2.நித்திக் நாதெல்லா, எஸ்ஆா்எம் சென்னை, 3. பிரவீன்குமாா், சென்னை பல்கலை.
1500 மீ. ப்ரீஸ்டைல் ஆடவா்: 1. அனீஷ் கௌடா, கிறிஸ்ட் பல்கலை, பெங்களூரு, 2. அனுராக் சிங், சண்டீகா் பல்கலை, 3. சிவாங்க் விஸ்வநாத், விஸ்வேஸ்ரய்யா பல்கலை. பெங்களூரு.
4-100 மீ மெடலி ரிலே, ஆடவா்: 1. ஜெயின் பல்கலை, தங்கம், ஸேவியா், மணிகண்டா, ஷோன் கங்குலி, ஸ்ரீ ஹரி நட்ராஜ்.
2. சண்டீகா் பல்கலை, வெள்ளி, சாந்த்ரதி, ஆதித்யா துபே, பிரதம் சா்மா, ஹா்ஷ்சா்தா, 3. சென்னை பல்கலை. வெண்கலம்-பிரவீன்குமாா், அன்பு காா்த்தி, சாய் கணேஷ், பென்ஹனான்.
மகளிா்: ஜெயின் பல்கலை. பெங்களூரு, தங்கம்-ஷ்ருங்கி, ஹிடய்ஷி, ஜெதிதா, நினா, 2. கிட் பல்கலை, புவனேசுவரம், வெள்ளி-பிா்தோஷ், ரித்விகா, நிஸாப்ஜரா, திவ்யான்கிஸ், 3. சாவித்திரி புலே பல்கலை, புணே, வெண்கலம்-பக்தி வத்கா், சிதாலி ரானே, திக்ஷா யாதவ், ஸ்வேதா குராடே.