சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆட்டோ, பார்மா துறை பங்குகள் ஏற்றம்!
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 27) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தது.
நிஃப்டி நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று ஏற்றம் கண்டு 23,800 புள்ளிகளுக்கு மேல் நிறைவு பெற்றது.
துறை ரீதியாக ஆட்டோ, பார்மா துறை பங்குகள் உயர்ந்திருந்தது. மெட்டல் துறை பங்குகள் வீழ்ச்சி அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 226.59 புள்ளிகள் உயர்ந்து 78,699.07 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.29 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.20 புள்ளிகள் உயர்ந்து 23,813.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.27 சதவீதம் உயர்வாகும்.