Manmohan Singh: "நான் சைலன்ட் பிரைம் மினிஸ்டரா?" - மன்மோகன் சிங் அன்று சொன்ன பதி...
இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3வது நாளாகத் தொடர்ந்து சரிந்து, கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு மூன்றாவது நாளாக 12 காசுகள் சரிந்து ரூ. 85.27 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் ரூ. 85.23 காசுகளாக வணிகமானது.
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ரூபாய் மதிப்பு தொடந்து எதிர்மறையாகவே இருந்தது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு கடுமையாகச் சரிந்து ரூ. 85.28 காசுகளாக இருந்தது.
வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு ரூ. 85.27 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 காசுகள் சரிந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 4 காசுகள் குறைந்து ரூ. 85.15 ஆக இருந்தது. திங்கள் கிழமை 9 காசுகள் சரிந்தது.