செய்திகள் :

Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம் என்ன?

post image
பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. தொடர் 1-1 என சமநிலையில் இருக்கையில் மெல்பர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 'The Western Australian' எனும் செய்தித்தாளில் 'Clown Kohli' என தலைப்பிட்டு கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறது.
Konstas vs Kohli

பார்டர் கவாஸ்கர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்தத் தொடரின் பில்டப்புக்காக பல ஆஸ்திரேலிய ஊடகங்களும் கோலியைப் பற்றி புகழ்ந்து ஸ்டோரிக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால், தொடர் தொடங்கி நடக்க நடக்க இந்த நிலை அப்படியே மாறியது. விமான நிலையத்தில் தன்னுடைய குழந்தைகளை அனுமதியின்றி படம் பிடித்ததற்காக கோலி ஆஸ்திரேலிய ஊடகத்தினர் சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் சில ஊடகங்கள் பெரிதுப்படுத்தியிருந்தன. கோலி மட்டுமில்லை கிடைக்கிற கேப்பிலெல்லாம் இந்திய வீரர்களுக்கு அழுத்தம் ஏற்றும் வகையில்தான் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செயல்பட்டு வந்தன. பத்திரிகையாளர் சந்திப்பில் ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஒன்றாகக் கூடி இந்திய அணியை அடித்தார்கள். பும்ராவை மித வேகப்பந்துவீச்சாளர் என குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்தான் இப்போது 'கோமாளி கோலி' என தலைப்பிட்டு ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறது. மெல்பர்ன் டெஸ்ட்டின் நேற்றைய நாளில் ஆஸ்திரேலிய அணிக்காக சாம் கான்ஸ்டஸ் என்ற இளம் வீரர் அறிமுகமாகியிருந்தார். அவர் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது கோலி வேண்டுமென்றே அவரிடம் சென்று தோளோடு தோளாக மோதினார். இதில் பலருமே கோலியை விமர்சித்தனர். ஐ.சி.சியும் கோலியின் போட்டி ஊதியத்தில் 20% அபராதமாக விதித்தது. இதை மையப்படுத்திதான் 'The Western Australian' எனும் செய்தித்தாள் 'Clown Kohli' என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அதில் கோலியை 'கோழை' எனக் குறிப்பிடும் வகையிலான சொற்களும் இடம்பெற்றிருக்கிறது.

Clown Kohli

அந்த செய்தித்தாளின் தலைப்பு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து கோலி பதிலடி கொடுக்க வேண்டுமென கோலி ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Aus v Ind : அபராதமா...போட்டியில் ஆட தடையா? விஸ்வரூபம் எடுக்கும் கோலி விவகாரம்!

பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகியிருக்கும் 19 வயது இளம் வீரரான கான்ஸ்டஸூடன் இந்திய அணியின் அனுபவ வீரரான கோலி ஸ்லெட்ஜ்ஜி... மேலும் பார்க்க

Konstas: 'அந்த பையனுக்கு பயம் இல்ல' - 1,445 நாள்களுக்கு பிறகு டெஸ்டில் பும்ரா பந்தில் சிக்ஸ்

பாக்சிங் டே டெஸ்ட் மேட்ச் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் மிக அதிகம் கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ். ஆரம்பத்தில் அணியில் ஆஸ்திரேலியா வீ... மேலும் பார்க்க

Sam Konstas : 'பும்ராவையே பதற வைத்த கான்ஸ்டஸ்' - முதல் செஷனில் என்ன நடந்தது?

மிரட்டும் வித்தைகளை கத்து வைத்திருக்கும் ஒரு பயமறியா இளஞ்சிங்கத்தை அரங்கம் நிறைந்த சர்க்கஸ் கூடாரத்துக்குள் இறக்கி விட்டதைப் போன்று இருந்தது கான்ஸ்டஸின் ஆட்டம். அத்தனை சுவாரஸ்யம்... அத்தனை விறுவிறுப்ப... மேலும் பார்க்க

Aus v Ind : 'அறிமுக வீரருடன் முட்டிக் கொண்ட கோலி' - கான்ஸ்டஸ் Vs கோலி - என்ன நடந்தது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகியிருக்கும் 19 வயது இளம் வீரரான கான்ஸ்டஸூடன் இந்திய அணியின் அனுபவ வீரரான கோலி ஸ்லெட்ஜ்ஜி... மேலும் பார்க்க

Manu Bhaker : `அனைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்; இந்த விஷயத்தை...' - கேல் ரத்னா குறித்து மனு பக்கர்

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெள... மேலும் பார்க்க