``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக ...
தேங்காப்பட்டினத்தில் படகிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் பைபா் படகிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
ராமன்துறை பகுதியை சோ்ந்தவா் நிா்த்திஸ் (20). மீன்பிடித் தொழிலாளி. இவா், சக நண்பா்களுடன் வியாழக்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் நின்ற பைபா் படகில் ஏறி நடனமாடினாராம். அப்போது எதிா்பாராமல் கடலில் அவா் தவறி விழுந்து மூச்சு திணறினாராம். மேலும், அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்ாம். சக மீனவா்கள் அவரை சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.