செய்திகள் :

BB Tamil 8: `அதை முத்துக்குமரன் சொல்லியிருந்தால் சாதாரணமாக எடுத்துருப்போம்; ஆனா..!" - மஞ்சரி ஃபேமிலி

post image
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபீரிஸ் டாஸ்க் நடைபெற்றது.

போட்டியாளர்களின் குடும்பமும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு சின்ன சின்ன அட்வைஸ் பாயிண்ட்களைக் கொடுத்தனர். அதில் செளந்தர்யா விஷ்ணுவுக்கு ப்ரொபோஸ் செய்தது என பல விஷயங்கள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதல் நாளன்று மஞ்சரியின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்றிருந்தனர். தங்களுக்கு முரண்பாடான விஷயங்களை அருணிடமும் அன்ஷித்தாவிடமும் மஞ்சரியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குச் சென்று திரும்பிய மஞ்சரியின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினோம்.

நம்மிடையே பேசிய மஞ்சரியின் குடும்பத்தினர், ``முத்துக்குமரன் , தீபக் , மஞ்சரி , இவங்க மூனு பேருமே ஒன்னா இருக்காங்க, ஆனா விளையாட்டுன்னு வந்துட்டா தனித்தனியாக தான் விளையாடுறாங்க . விளையாடும்போது ஒருத்தர ஒருத்தர் சார்ந்து விளையாடுறது இல்ல. இவங்க இல்லாம ஜாக்குலின் ரொம்ப ஸ்ட்ராங்கான போட்டியாளர். ஃபைனல் வர்றதுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கு. பிக் பாஸ் வீட்டை சரியா புரிஞ்சிக்கிட்டு விளையாடுறவங்கன்னா ஜாக்குலின் பெயரைச் சொல்லலாம். நிலவ் வீட்டுக்குள்ள போனப்போ அருண்கிட்ட பேசலன்னு சமூக வலைதளப் பக்கங்கள்ல ஒரு விஷயம் பேசப்பட்டது.

Manjari Family

அப்படி எல்லாம் கிடையாது. அவன் சின்ன பையன் அவனுக்கு யாரு என்னன்னு எப்படி தெரியும். அது இல்லாம வீட்டுக்குள்ள அவன் மஞ்சரிக்கூட இருக்கும் போது யாரு வந்து பேசுனாங்களோ அவங்க கூட தான் அவன் அதிகமாக பேசினான். அவனா யார்கிட்டையும் பேசல. இவங்ககிட்ட பேசனும், இவங்கக்கிட்ட பேசக்கூடாதுன்னுலாம் அவனுக்கு தெரியாது. நிலவ்கூட வந்து விளையாடுறவங்ககிட்டதான் அவன் போனான். நாங்க உள்ள போனப்போ அருண்கிட்ட எங்க அம்மா சொன்ன விஷயங்களுக்கு மன்னிப்புக் கேட்டார். 'அந்த வார்த்தைய நான் சொன்னது எனக்கே தெரியல மன்னிச்சுடுங்க'னு சொன்னாரு.

எனக்கு அவர் ' மஞ்சரி பொம்மையோட தலையை திருகி போட்டிடுங்க'னு சொன்னது ஒரு மாதிரி இருந்துச்சு. அதை பத்தி கேட்டதுக்கு 'இல்ல நான் அதை நகைச்சுவையாக தான் சொன்னேன்'னு சொன்னார். அவங்க யாரும் இதுவரை நகைச்சுவையாக அவக்கிட்ட நடந்துக்கல. அப்புறம் இது மட்டும் எப்படி நகைச்சுவையாகும்னுதான் எனக்கு இருந்துச்சு. இதே முத்துக்குமரன் சொல்லியிருந்தால் சாதாரணமாக எடுத்துருப்பேன்.

Manjari Family

அதைதான் அப்போது பிக் பாஸ் வீட்டுல கேட்டேன். மஞ்சரி எப்போதும் ஸ்ட்ராங்தான். தனக்காக யாராச்சும் இருந்தா அவங்களுக்காக அவள் இருப்பாள். வீட்டுக்குள்ள மஞ்சரி ஒரு முறை தயிர்ல சர்க்கரை கலந்து சாப்பிடுறதுக்கு கேட்டிருப்பாள். மஞ்சரி வீட்டிலிருக்கும்போதும் பால் எடுத்துக்கமாட்டாள். அதனால் கால்சியமுக்காக தயிர் எடுத்துக்குவாள். ஆனால், அந்த விஷயத்தையும் சொன்னப் பிறகு தர்ஷிகாவே ரவா லட்டு பண்ணி சாப்பிட்டாங்க. மஞ்சரி இருந்தால் மட்டும் என்ன பிரச்னைனுதான் அந்த விஷயத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு தோணுச்சு. " எனப் பேசி முடித்துக் கொண்டனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

Bigg Boss Tamil 8: இந்த வாரம் `அவுட்’ ஆன இரண்டு பேர் - ஏமாற்றத்துடன் வெளியேறிய பெண் போட்டியாளர்?

பிக்பாஸ் தமிழ் 8 கிளைமேக்ஸை நோக்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு ஆறு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இணைந்த... மேலும் பார்க்க

BB TAMIL 8 DAY 82: `காதல்' மொமென்ட்ஸ், மகேஷின் எழுச்சியுரை... யார் எடுப்பார் பணப்பெட்டியை?!

குடும்பச் சந்திப்பு முடிந்து நண்பர்களின் சந்திப்பு இந்த எபிசோடில் துவங்கியது. (இன்னும் அக்கம் பக்கத்து வீட்ல இருந்து யாராவது இருக்கீங்களா?!) இது காதலர்களின் சந்திப்பாகவும் மாறியது. சவுந்தர்யா நிகழ்த்த... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ஷோவை சுற்றி வரும் முரட்டு நம்பிக்கைகள்... போட்டியாளர்களை அசைத்துப் பார்க்கிறதா?

பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அருண் உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. சில வாரங்களுக்குப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராணவ், ர... மேலும் பார்க்க

BB Tamil 8: 'இவ்வளவு நாள் தீபக் அண்ணா இந்த வீட்டில...' - பிக் பாஸ் வீட்டில் ஈரோடு மகேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

Serial Update : `கர்ப்பமானதை அறிவித்த சங்கீதா டு திருமணம் செய்து கொண்ட `நெஞ்சத்தை கிள்ளாதே' நடிகை

வாழ்த்துகள் மதுமிதா - விஷ்ணு ஜோடிஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நெஞ்சத்தைக் கிள்ளாதே'. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் மதுமிதா இளையராஜா. இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: 'சின்ன வயசுல அவன ஏங்க வச்சத நினைச்சா கஷ்டமாருக்கு' - முத்துக்குமரன் தந்தை பேட்டி

பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம்ரவீந்தர், அர்னவ், சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அருண் உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. சில வாரங்களுக்குப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராணவ், ரய... மேலும் பார்க்க