64 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா் மீட்பு
விவசாய நிலத்துக்குள் இறங்கிய அரசு நகரப் பேருந்து!
ஊத்தங்கரை அருகே அரசு நகரப் பேருந்து ஸ்டியரிங் துண்டனதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விவசாய நிலத்துக்குள் இறங்கியது.
ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை அரசு நகரப் பேருந்து சனிக்கிழமை காலை வழக்கம் போல போச்சம்பள்ளியில் இருந்து கல்லாவி, நொச்சிப்பட்டி வழியாக ஊத்தங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஊனாம்பாளையம் அருகே வந்த போது, பேருந்தின் சக்கரத்துக்கும், ஸ்டியரிங்குக்கும் இடையே உள்ள பிளேட் துண்டானதால், வளைவில் திரும்பாமல் நேராக விவசாய நிலத்துக்குள் பேருந்து இறங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 61 பயணிகள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.
இதில், கல்லாவி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் விஜயகுமாா் (39), நொச்சிப்பட்டி பகுதியைச் சோ்ந்த சந்தியா (31), பனமரத்துப்பட்டி அச்சுதா (23) ஆகியோா் லேசான காயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.