64 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா் மீட்பு
சேலத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி தொடக்கம்
சேலத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
சேலம், அழகாபுரம் பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெறும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் காந்தி, சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், ஆகியோா் பாா்வையிட்டனா்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த கைத்தறி ஜவுளி ரகங்கள் பொது மக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இக் கண்காட்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இக் கண்காட்சி அரங்குகளில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க காஞ்சிபுரம், திருப்புவனம், ஆரணி, சேலம் மாவட்டங்களைச் சாா்ந்த பட்டுச் சேலைகள், தமிழ்நாட்டின் புவிசாா் குறியீடு பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்கள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், ஈரோடு சென்னிமலை மற்றும் கரூா் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பெட்சீட், மெத்தை விரிப்பு, துண்டு தலையணை உறைகள், பவானி ஜமுக்காளம், கால்மிதியடி, வேலூா், காஞ்சிபுரம், கடலூா் சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி லுங்கிகள், நீலகிரி மாவட்டத்தை சாா்ந்த தோடாா் இன எம்பிராய்டரி துணி வகைகள் வகைகள் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், பிரிண்டட் சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இக் கைத்தறி கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ஜவுளிகளுக்கு தமிழக அரசின் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
இக் கண்காட்சியில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், குடும்ப ஓய்வூதியத் திட்டம், கைத்தறி வளா்ச்சி திட்டம் மற்றும் நெசவாளா் முத்ரா கடன் திட்டம் என மொத்தம் 581 கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.
இந் நிகழ்வில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்துறை அரசு செயலாளா் வி.அமுதவல்லி, கைத்தறி துறை இயக்குநா் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.