செய்திகள் :

வாடிவாசல் அப்டேட்!

post image

தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் திரைப்படம் குறித்து புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை - 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இதனால், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த சூர்யா அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: மிஷ்கின் - விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!

தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை - 2 வெளியீட்டை முடித்துள்ளதால், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு, “வாடிவாசல் படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளன. படத்திற்காக லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனிமேஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இனி நடக்க வேண்டியது நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-12-2024 ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையா... மேலும் பார்க்க

புரோகபடி லீக்: இறுதி ஆட்டத்தில் இன்று ஹரியாணா-பாட்னா மோதல்

புரோ கபடி லீக் தொடா் 11-ஆவது சீசனின் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலா்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளின் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. பாட்னா ... மேலும் பார்க்க

பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு வி... மேலும் பார்க்க

கூலி, ரெட்ரோ, குட் பேட் அக்லி... களைகட்டும் 2025 கோடை!

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார், சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின... மேலும் பார்க்க

ரெட்ரோ - வாய் பேச முடியாதவராக நடித்த பூஜா ஹெக்டே?

ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்... மேலும் பார்க்க

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் வணங்கான்?

வணங்கான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர... மேலும் பார்க்க