Indigo Airlines: தொழில் நுட்ப கோளாறு... மும்பை விமான நிலையத்தில் பயணிகள் 16 மணி ...
Untitled Dec 28, 2024 04:16 pm
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும். மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.
எஃப்ஐஆர்வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் சந்திப்பு நடத்த அரசிடம் சென்னை காவல் ஆணையர் அனுமதி பெறவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்குரைஞா்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினா் வெளியிட்டது சட்டவிரோதம். முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதை காவல் ஆணையரே ஒப்புக்கொண்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கைது செய்யப்பட்ட நபா் மீது 20 வழக்குகள் உள்ளதாக காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா். அந்த நபரின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பதை விசாரிக்க வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பம் மனித இனத்தை அழிக்கும்: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எச்சரிக்கை!
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவையும் மீறி முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இடைக்காலமாக இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.”கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமே உள்ளதாக காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா். ஆனால், பல வழக்குகள் உள்ளன. அவற்றையும் விசாரிக்க வேண்டும்”என வாதிட்டனா்.
இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை நீதிபதிகள் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.