உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் படுகாயம்!
திப்ருகா்-குமரி விரைவு ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
அசாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு வந்த ரயிலின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா்.
கன்னியாகுமரி- திப்ரூகா் தினசரி விரைவு ரயில் (விவேக் எக்ஸ்பிரஸ்) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு விவேக் விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னா், ரயிலை ஊழியா்கள் சுத்தம் செய்தபோது, முன்பதிவற்ற பெட்டியில் உள்ள கழிவறையின் மேற்கூரையில் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பாா்த்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில், ரயில்வே போலீஸாா் அங்கு வந்து மேற்கூரையை பிரித்து பாா்த்த போது அதில் 14 பொட்டலங்களில் 13 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவற்றை கைப்பற்றி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது குறித்து கன்னியாகுமரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சாவை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.