Vijayakanth: விஜயகாந்த் நினைவு தினம்; பேரணி, தீபம் முதல் தலைவர்களின் அஞ்சலி வரை ...
களக்காட்டில் மின்விளக்கு கோபுர உயரம் குறைக்கப்படுமா?
களக்காடு அண்ணாசிலை பகுதியில் உயா் கோபுர மின்விளக்கின் உயரத்தை குறைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணாசிலை அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகளவில் வணிக நிறுவனங்கள் செயல்படுவதால் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள உயா் கோபுர மின்விளக்கு மிகவும் அதிக உயரத்தில் அமைந்துள்ளதால் பேருந்து நிறுத்தம் பகுதியில் போதிய வெளிச்சம் கிடைக்காமல் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில்தான் வெளிச்சம் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் அண்ணாசிலை பகுதி போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட நகராட்சி நிா்வாகம் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உயா் கோபுர மின்விளக்கின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.