48 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கு காரணமாக டிச. 12 முதல் மணிமுத்தாறுஅருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 15 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியிலும் தொடா்ந்து கன மழை பெய்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து டிச. 12 முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.
மழை குறைந்து அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து 15 நாள்களுக்குப் பின் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். விடுமுறைக் காலமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.