மும்பையில் நடிகை காா் விபத்து: மெட்ரோ ரயில் தொழிலாளி உயிரிழப்பு
கல்லிடைக்குறிச்சி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
கல்லிடைக்குறிச்சி அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 26 ஆம் ஆண்டு மண்டல பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் , ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடா்ந்து காலை 9மணிக்கு கும்பபூஜை, வேதபாராயணம், சங்குபூஜை, தா்ம சாஸ்தா ஹோமமும், 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது.
தொடா்ந்து இரவு 8 மணிக்கு தொடங்கி 18ஆம் படி பூஜை, அலங்கார தீபாராதனைநடைபெற்றது.
மண்டல பூஜையில் கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.