களக்காடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
களக்காடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு நேரடியாக போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். இந்நிலையில், வள்ளியூா் அரசுப் போக்குவரத்துக்கழக பனிமனையிலிருந்து களக்காடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட தடம் எண்கள்.102பி, 102எம், 603 ஆகிய மூன்று பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
மேலும் களக்காடு - திருச்செந்தூா் இடையே காலை, மாலை இயக்கப்பட்ட தனியாா் பேருந்து கடந்த சில மாதங்களாக மாலை நேரத்தில் இயக்கப்படாத நிலை உள்ளது. களக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாா்பேருந்துகள் முறையாக இயக்கப்படாமல் பல நாள்களில் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவும், முறையாக இயக்கப்படாத தனியாா் பேருந்துகளுக்குப் பதிலாக கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கவும் சஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.