மதுக் கடைகளை குறைக்காமல் விழிப்புணா்வு விளம்பரத்தால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் க...
கோலியும் கான்ஸ்டாஸும் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்..!
மோதலில் ஈடுபட்ட கோலியும் கான்ஸ்டாஸும் இணைந்து புகைப்படம் வெளியிடலாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் கிளார்க் கூறியுள்ளார்.
டிச.26ஆம் தேதி மெல்போர்னில் துவங்கிய இந்தியா - ஆஸி.க்கு இடையேயான 4ஆவது டெஸ்ட்டில் ஆஸி. சார்பாக இளம் அதிரடி வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்.
முதல்நாளில் கோலி கான்ஸ்டாஸை வேண்டுமென்றே இடிப்பார். இதனால் கோலிக்கு 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் ஆஸி. ஊடகங்கள் கோலியை கடுமையாக விமர்சித்தன. முன்னாள் இந்திய வீரர்களும் கோலிக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள்.
கோலியும் கான்ஸ்டாஸும் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்
இந்த நிலையில் ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் கிளார்க் பேசியதாவது:
கான்ஸ்டாஸ் ஒரு சிறந்த போட்டியாளர். போட்டியிட்டு நன்றாக விளையாட நினைப்பவர். என்னுடைய பார்வையில், கோலி - கான்ஸ்டாஸ் மோதல் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. போட்டி முடிந்தபிறகு இருவரும் புகைப்படம் எடுத்துகொண்டு அதைப்பற்றி பேசி சிரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதிலிருந்து கோலி பின்னகரமாட்டார். கோலி மட்டுமல்ல யாருமே இப்படி செய்யமாட்டார்கள். அது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு.
கான்ஸ்டாஸை சிறுவயதில் இருந்து பார்த்து வருகிறேன். அதிரடியான வீரர். முதல் இன்னிங்ஸ் சற்று அவரது வழக்கமான பாணி இல்லை.
கான்ஸ்டாஸ் வார்னரில்லை
2ஆவது இன்னிங்ஸ் எப்படி விளையாடுவாரென பார்க்க ஆசையாக இருக்கிறது. அதிரடியா அல்லது வழக்கமான பாணியா எனப் பார்க்க வேண்டும்.
வார்னரும் கான்ஸ்டாஸும் அவரவர் வழிகளில் சிறப்புடையவர்கள். கான்ஸ்டாஸ் களத்தில் நீண்ட நேரம் இருந்து பேட்டினை நன்றாக வீசுகிறார். அனைத்து நல்ல வீரர்களைப் போலவே அவருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறது என்றார்.
பும்ரா ஓவரில் கான்ஸ்டாஸ் அடித்தது ஒட்டுமொத்த உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது குறிப்பிடத்தக்கது.