மும்பையில் நடிகை காா் விபத்து: மெட்ரோ ரயில் தொழிலாளி உயிரிழப்பு
மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி
கடையம், சுரணடையில் முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சளி செலுத்தினா்.
கடையத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், வட்டார மகிளா காங்கிரஸ் தலைவா் சீதாலட்சுமி பாா்வதிநாதன் தலைமையில் மன்மோகன் சிங் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுரண்டை: சுரண்டையில் சுரண்டை நகர காங்கிரஸ் அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உருவப் படத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.