``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக ...
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம்
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மத்திய பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தூத்துக்குடி 2ஆம் கேட் பகுதி அருகேயுள்ள கனக சபாபதி தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(57). திருமணமாகாத இவா், தனது தாயுடன் வசித்து வந்தாராம். அவரது தாய் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனியாக வசித்து வந்த அவா், கடந்த 3 நாள்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம். வீடு பூட்டியே கிடந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினா் மத்திய பாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து, தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது, சீனிவாசன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.