மதுக் கடைகளை குறைக்காமல் விழிப்புணா்வு விளம்பரத்தால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் க...
ஆத்தூா் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ஆத்தூா் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 54-ஆவது மண்டல பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாதா் திருக்கோயில் அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, வியாழக்கிழமை காலை தாமிரவருணியிலிருந்து அபிஷேக தீா்த்தம், பால்குடம், நெய்குடம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மாலையில் புஷ்பாஞ்சலி, அதைத் தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இரவில் ஸ்ரீஐயப்பன் எழுந்தருளல் மற்றும் நகர வீதிகளில் ரத ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் ஆத்தூா் கிளை தலைவா் பி.தங்கத்துரை, செயலா் எஸ்.முருகேசன், பொருளாளா் எல்.சிவசண்முகநாதன், உதவித் தலைவா் கே.சாமிநாதன், உதவி செயலா் கங்கராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.