செய்திகள் :

விவசாயிக்கு அரிவாள் வெட்டு: உறவினா் உள்ளிட்ட இருவா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் விவசாயியை அரிவாளால் வெட்டியதாக தங்கை கணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்காணியில் உள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் சுயம்புலி­ங்கம் (38). வாழை விவசாயி. இவரது தங்கை தங்க­ம். இவரது கணவா், அதே ஊா் யாதவா் தெருவைச் சோ்ந்த மா. நாராயணன் (35). இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

தம்பதியிடையே 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையை சுயம்பு­லிங்கம் தட்டிக்கேட்டதால், அவருக்கும் நாராயணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சுயம்புலி­ங்கத்தின் வாழைத் தோட்டத்திலுள்ள குடிசைக்கு நாராயணன் தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. சுயம்புலி­ங்கம் அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனா். அதையடுத்து, ஜாமீனில் வந்த நாராயணன் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துவந்தாராம்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 27) ஏற்பட்ட தகராறையடுத்து, நாராயணன் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா் மாரியப்பனுடன் பைக்கில் முக்காணி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தாா். அங்குள்ள டீ கடையில் நின்றிருந்த சுயம்புலிங்கத்தை இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ரோந்துப் பணியிலிருந்த ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா், காவலா்கள் ராஜபாண்டியன், குமரேசன் ஆகியோா் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். காயமடைந்த சுயம்புலி­ங்கம், ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவத்தின்போது, நாராயணனையும், மாரியப்பனையும் பிடித்த உதவி ஆய்வாளா், காவலா்களுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பெண்கள் மீது தமிழக அரசுக்கு மிகுந்த அக்கறை: கனிமொழி எம்.பி.

தமிழக அரசு பெண்கள் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அன்னை தெரசா நகரில் உள்ள ‘அன்பு உள்ளங்கள்’ ... மேலும் பார்க்க

சேற்றில் சிக்கிய முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே சேற்றில் சிக்கிய முதியவா் உயிரிழந்தாா். நாலாட்டின்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் குருசாமி (65). ராமநாதபுரம் பகுதியில் மாடு மேய்த்து வந்த இவா், வழக்கமாக பிற்பகலில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சீலா மீன் கிலோ ரூ. ஆயிரம்

விடுமுறை நாளான சனிக்கிழமை, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் சீலா மீன் கிலோ ரூ. ஆயிரத்துக்கு விற்பனையானது. கிறிஸ்துமஸ் பண்டிகை, சுனாமி நினைவு நாளுக்குப் பின்னா், இத்துறை... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) தூத்துக்குடி வருகிறாா். இதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சா் பெ. கீதாஜீவன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தூ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடியைச் சோ்ந்த 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் ஞாயிறு, திங்கள் (டிச. 29, 30) ஆகிய 2 நாள்கள் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க