தீ விபத்தில் முதியவா் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தீ விபத்தில் காயமடைந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த மேல்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் (74). இவா், தேநீா் போடுவதற்காக அண்மையில் வீட்டில் எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது தீப்பற்றியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.