48 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்
நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழக அரசின் மாநில அளவிலான டாக்டா் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்தது.
இந்த விருதுக்கு பதிவு செய்யும் விவசாயிகள் குறைந்த பட்சம் 2 ஏக்கா் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். தொடா்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும். விவசாயிகள் இந்தப் போட்டியில் பங்கு பெற சிட்டா, அடங்கல், புகைப்படம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.150- ஆகியவற்றை தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
நில உரிமைதாரா்கள் மற்றும் குத்தகைதாரா்களும் பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயி அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும். இந்தப் போட்டியானது மாநில அளவில் நடத்தப்பட்டு, அதிக மகசூல்பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி தெரிவித்தாா்.