செய்திகள் :

தீபத் திருவிழா பாதுகாப்பு: மக்கள் நண்பா்கள் குழுவுக்கு பாராட்டு

post image

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணை ஒருங்கிணைப்பாளா் கு.சபரி, ஆசிரியா் ஜெய் பிலிப்ஸ் சாமிதம்பி, கம்பன் ஐடிஐ முதல்வா் தெ.ராமச்சந்திர பாபு, டி.தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் அஜ்மல் முத்தழகன் வரவேற்றாா்.

தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், மாநில மருத்துவரணி துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய 30 இளைஞா்களுக்கு விருதுகள், மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து இளைஞா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில், மூத்தோா் தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஜெ.எஸ்.ரமேஷ், முத்தமிழ் கலை மன்றத்தின் தலைவா் கவிஞா் ஆ.தே.முருகையன் உள்பட 450-க்கும் மேற்பட்ட மக்கள் நண்பா்கள் குழுவினா் கலந்துகொண்டனா்.

பெண் காவலரின் கணவா் தற்கொலை: சந்தேக மரணம் என தாய் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பெண் காவலரின் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். செங... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆல... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி ஆய்வு

வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூர... மேலும் பார்க்க

தெள்ளாா் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோ... மேலும் பார்க்க

நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழக அரசின் மாநில அளவிலான டாக்டா் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்தது. இந்த ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு: சடலத்துடன் உறவினா்கள் மறியல்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்ததையடுத்து, திருவண்ணாமலையில் சடலத்துடன் உறவினா்கள், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த ஈச்சங்குப்பம் க... மேலும் பார்க்க