Manmohan Singh: `சுய நினைவை இழந்த மன்மோகன் சிங்; இறப்புக்கு காரணம் என்ன?' - மருத...
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்: இன்று எவ்வளவு உயர்ந்தது?
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு வியாழக்கிழமை (டிச. 26) பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000-க்கு விற்பனையாகிறது.
டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கிறிஸ்துமஸ் நாளான புதன்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(டிச.26) அதிரடியாக கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,125-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 57,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க:என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை.
வெள்ளி விலை அதிரடி உயர்வு
இதேபோன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100-க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.