செய்திகள் :

எக்ஸ்-டிவிடெண்ட் முன்னிட்டு வேதாந்தா பங்குகள் 3% சரிவு!

post image


மும்பை பங்குச் சந்தையில், அறிவிக்கப்பட்ட டிசம்பர் 24 அன்று, எக்ஸ்-டிவிடெண்டை முன்னிட்டு, வேதாந்தா பங்கின் விலை கிட்டத்தட்ட 3 சதவிகிதம் சரிந்து ரூ.460.45 ஆக உள்ளது. நேற்று இது ரூ.473.10 ஆக முடிவடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் இது ரூ.465.75 ரூபாயாக தொடங்கி வர்த்தகமானது.

இந்த நிலையில், டிசம்பர் 16 தேதியன்று பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், இயக்குநர் குழுவானது, ரூ.1 முக மதிப்பில் உள்ள ஒவ்வொரு பங்குகளுக்கும், நான்காவது இடைக்கால ஈவுத்தொகையான ரூ.8.50 என ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தது.

முன்னதாக வேதாந்தா நிறுவனம், இந்த ஆண்டு ஆகஸ்ட், ஜூலை மற்றும் மே மாதங்களில் முறையே ஒரு பங்குக்கு ரூ.20, ரூ.4 மற்றும் ரூ.11 என ஈவுத்தொகை அறிவித்தது. இந்த சமீபத்திய அறிவிப்பின் மூலம், 2025 நிதியாண்டில் வேதாந்தாவின் மொத்த ஈவுத்தொகை ரூ.16,799 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

2025 நிதியாண்டு, இரண்டாவது காலாண்டில், வேதாந்தா நிறுவனம் 5,603 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.915 கோடி நிகர இழப்பாக இருந்தது. இந்த காலாண்டில் வருவாய் ரூ.37,634 கோடியாக இருந்தது. இருப்பினும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், வேதாந்தாவின் டாப்லைன் 3.4 சதவிகிதம் குறைந்தது. அதே வேளையில், குறைந்த வரிச் செலவுகளால், நிறுவனமானது லாபத்திற்கு திரும்பியது.

காலாண்டிற்கான வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்பு முன் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 29.5 சதவிகிதத்திலிருந்து 26.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

38 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ

கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடா்ந்து முதலிடம் வகிக்கிறத... மேலும் பார்க்க

ஃபெனிக்ஸிஸ் நிறுவனத்தை வாங்கும் ஆரியன்ப்ரோ சொலுயூசன்ஸ்!

புதுதில்லி: ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் இன்று பாரிஸை தளமாகக் கொண்ட கன்சல்டன்சி நிறுவனமான ஃபெனிக்சிஸ் நிறுவனத்தை 10 மில்லியன் யூரோக்கள் (ரூ.90 கோடி) ரொக்க ஒப்பந்தத்தில் வாங்கியதாக தெரிவித்துள்ளது.ஃபெனிக்ஸிஸ... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.85.20-ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 9 காசு குறைந்து ரூ.85.20 என்ற புதிய நிலையில் நிலைபெற்றது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச... மேலும் பார்க்க

அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: நிலையற்ற அமர்விலை இன்று, பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஓரளவு சரிந்து முடிவடைந்தது. நிஃப்டி 23,700 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்ற நிலையில், ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு மற்றும் எஃப்எம்சிஜி ஆகிய துறை ப... மேலும் பார்க்க

5 நிறுவனங்களின் சொத்துக்களை ஏலம் விடும் செபி!

புதுதில்லி: முதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக வசூலித்த பணத்தை மீட்பதற்காக, பிஷால் குழுமம் மற்றும் சுமங்கல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் 28 சொத்துகளை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11 ஆக நிலைபெற்றது.அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலர் தேவை காரணமாக ரூபாய் இன்று பலவீனமாக இருந்தது. மேலும், நிலையற்ற அர... மேலும் பார்க்க