"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொலை: ஐ.நா.
காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் நிவாரணக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதாகவும், போர் தொடங்கியதில் இருந்து 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓராண்டுக்கு மேலாக காஸாவை இஸ்ரேல் படையினர் தாக்கி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த 45,338 பேர் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்களும் அடங்குவர்.
ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர் பிழைத்தவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயமடைந்துள்ளனர். கற்றல் இல்லாமல், காஸாவில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இந்தக் குழந்தைகளுக்கான எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, எதிர்காலத்துக்கான நம்பிக்கை இழக்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
“ஹாமாஸுடன் பணயக் கைதிகளை திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு நாள்கள் எடுக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், அனைவரையும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு வரும் வரை முயற்சிகள் அனைத்தும் தொடரும்” என்றார்.