செய்திகள் :

"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தென் மாவட்டங்களில் பல பிரச்னைகள் இருந்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசியல் புள்ளிகள் மூலம் கேரளாவுக்குக் கடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்களை அழித்து கேரளாவிற்குக் கொண்டு செல்கிறார்கள். ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

10 அணு உலைகள்

இதுதொடர்பாக தமிழக முதல் அமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மணவாளகுறிச்சி மணல் ஆலைக்காக கிள்ளியூரில் அணுச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இந்த திட்டத்திற்குத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது. இயற்கையை அழிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் 2 இரண்டு அணு உலைகளைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு 10 அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த அணு உலைகளால் பல பாதிப்புகள் ஏற்படும். வெடித்தால் நான்கு மாவட்டங்களும் அழிந்துவிடும். 

அன்புமணி ராமதாஸ்

கச்சத்தீவு

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், பன்றிக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. குமரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் உள்ள 33 சோதனைச் சாவடிகளைக் கடந்து இதைக் கொட்டி வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது இந்திரா காந்திதான். அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க அமைதியாக இருந்தது. தி.மு.க.வும், காங்கிரசும் தான் இதற்கு முக்கிய காரணம். பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சீமை கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஞ்சா புழக்கம்

இந்தியாவில் தமிழகம் தான் கஞ்சாவைச் சிறு தொழிலாகச் செய்வதில் முதன்மை பெற்று வருகிறது. கோவில், பள்ளிகளில் கூட சரளமாகக் கஞ்சா புழக்கத்திலிருந்து வருகிறது. மூன்று தலைமுறையை மதுவால் அளித்த இந்த அரசு தற்பொழுது கஞ்சாவால் அளிக்க நினைக்கிறது. இதற்குக் காவல்துறையும் உடந்தையாக இருந்து வருகிறது. தமிழ்நாடு என்ற பெயரைக் கஞ்சா நாடு எனப் பெயர் மாற்றம் செய்யலாம் எனக்கூறும் அளவுக்குக் கஞ்சா விற்பனை சிறு தொழிலாக மாறிவிட்டது. நெல்லையில் நீதிமன்றத்துக்கு முன் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். முதலமைச்சர் கையில் தான் சட்டம் ஒழுங்கு உள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்குத் தமிழகத்தில் சீர்குலைந்து உள்ளது.

சாதி வாரியாக கணக்கெடுப்பு

சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளன. ஆனால் முதலமைச்சருக்குச் சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப் பயமாக உள்ளது. சென்னையைச் சுற்றித் தான் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. நாங்கள் தொழிற்சாலைக்கு எதிரானவர்கள் அல்ல. விளைநிலங்களை அழித்து தொழிற்சாலை வேண்டாம் என்று தான் சொல்கிறோம். தரிசு நிலங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும்.  ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும்.

நாகர்கோவிலில் செய்தியளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்

நீட் விவகாரம்

8-ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை தவறான அணுகுமுறை. எனவே அதைத் திரும்பப் பெற வேண்டும். பா.ஜ.க கூட்டணியிலிருந்தாலும் நீட் விவகார பிரச்னை தொடர்பாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நல்லதைப் பாராட்டுவோம். தவறை எதிர்க்கத் தான் செய்வோம். சமூக நீதி மேல் கலைஞருக்குப் புரிதல் இருந்தது. ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு அது இல்லை. மு.க.ஸ்டாலினைச் சுற்றி உள்ள அமைச்சர்கள் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி தான் அமையும். அந்த கூட்டணியில் நாங்கள் கண்டிப்பாக இருப்போம். கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும்" என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை; அரசுக்கு வலியுறுத்தல்களைப் பட்டியலிட்ட TVK விஜய்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமா? - அமைச்சர் பதிலால் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

``பாப்கார்ன் விவகாரம் மீம்ஸ்களின் மூலம் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது" - சாடும் காங்கிரஸ்

கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - ராமதாஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; 15 பேர் உயிரிழப்பு! - என்ன நடக்கிறது அங்கே?

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் பர்மால் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொ... மேலும் பார்க்க