செய்திகள் :

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை; அரசுக்கு வலியுறுத்தல்களைப் பட்டியலிட்ட TVK விஜய்

post image
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகம்

இது குறித்து எக்ஸ் தளத்தில் விஜய், ``சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தவெக - விஜய்

எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலகட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்." என்று வலியுறுத்தியிருக்கிறார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தென் மாவட்டங்களில் பல பிரச்னைகள் இருந்து வரு... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமா? - அமைச்சர் பதிலால் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

``பாப்கார்ன் விவகாரம் மீம்ஸ்களின் மூலம் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது" - சாடும் காங்கிரஸ்

கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - ராமதாஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; 15 பேர் உயிரிழப்பு! - என்ன நடக்கிறது அங்கே?

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் பர்மால் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொ... மேலும் பார்க்க