பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளா் இடமாற்றம்
ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லையளித்த உதவி ஆய்வாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (54). ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவா், சமீபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு பெற்று ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா்.இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மலையடிப்பட்டியில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவுப் பணியிலிருந்த பெண் காவலரிடம் மோகன்ராஜ் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் மோகன்ராஜை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். மேலும், துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.