டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
அரசுப் பள்ளியில் காப்பா் மின் வயா்கள் திருட்டு
விருதுநகா் அருகே பாலவநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காப்பா் மின் வயா்கள் திருடப்பட்டன.
இங்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் தனித் தனியாக 7 கட்டடங்கள் உள்ளன. தலைமை ஆசிரியா் அலுவலகக் கட்டடத்திலிருந்து 7, 8 -ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் காப்பா் மின் வயா்களை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை உமாதேவி அளித்த புகாரின் பேரில். அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.