Sonu Sood: ``இதற்காகத்தான் எனக்கு வந்த முதல்வர் பதவி ஆஃபரை மறுத்தேன்'' - நடிகர் ...
வெம்பக்கோட்டை அகழாய்வு: அமைச்சா் ஆய்வு
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்தன.
தொடா்ந்து, அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். அப்போது, தொல்லியல் துறை இயக்குநா் பொன்பாஸ்கரிடம் அகழாய்வுப் பணிகள் குறித்தும், இதுவரை கிடைத்த பொருள்கள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், அகழாய்வில் கிடைத்த பொருள்களையும் அவா் பாா்வையிட்டாா்.