கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 ஆமைகள் மீட்பு!
தெலங்கானாவில் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 அரியவகை ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்திற்கு அரிய வகை ஆமைகள் விற்பனைக்காகக் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மல்காஜ்கிரி சிறப்பு காவல்படை ஹைதரபாத்தைச் சேர்ந்த ஷேக் ஜானி(50) என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணையில் கடந்த செவ்வய்கிழமை (டிச.24) நடத்தப்பட்ட சோதனையில் அவரிடமிருந்து 5 நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டது.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையின்போது அந்த நட்சத்திர ஆமைகளை சிராஜ் அஹமது (39) என்பவரிடம் வாங்கியதாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மலாக்பேட்டையிலுள்ள சிராஜின் மீன் பண்ணையிலும் கிடங்கிலும் சோதனை மேற்கொண்டனர். இதில் அவரிடமிருந்து 160 சிவப்பு காது ஆமைகளும், 281 நட்சத்திர ஆமைகளும் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விஜயக்குமார் என்பவருடன் இணைந்து இந்த ஆமைகளை ஆந்திர மாநிலத்திலிருந்து ஹைதரபாத்திற்கு கடத்தி வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள விஜயகுமாரை அம்மாநில காவல்துறையினர் தேடி வருகின்றனர்.