அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்ததாக மூவா் கைது
அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்ததாக 3 பேரை சாத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள மேலகோதைநாச்சியாா்புரத்தில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (43) தனது வீட்டின் அருகே தகர செட் அமைத்து, அதில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, போக்குவரத்து நகா் பகுதியில் மேட்டமலையைச் சோ்ந்த உஷா அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, சாத்தூா் நகா் கிராம நிா்வாக அலுவலா் திருப்பதி கொடுத்த புகாரின் அடிப்படையில், உஷா, சிவகாசியை சோ்ந்த கண்ணன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்த பட்டாசுகள், பட்டாசுக்குத் தேவையான மூலப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.