செய்திகள் :

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாள்கள் அனுமதி

post image

மாா்கழி அமாவாசை, சனிப் பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனிக்கிழமை (டிச. 28) முதல் 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

சதுரகிரியில் வருகிற 28-ஆம் தேதி சனிப் பிரதோஷமும், 30-ஆம் தேதி மாா்கழி அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது.

இதற்காக வருகிற சனிக்கிழமை முதல் 31-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.

இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மழை பெய்தாலோ, ஓடையில் நீா்வரத்து அதிகரித்தாலோ பக்தா்களின் பாதுகாப்புக் கருதி மலையேறத் தடை விதிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த பக்தா்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மாா்கழி மாதம் தொடங்கியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ... மேலும் பார்க்க

நக்கமங்கலம் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் திலகவதி தலைமை... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

விருதுநகா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் ஐயப்பன் திருவீதி உலா

மண்டல பூஜையையொட்டி, ராஜபாளையத்தில் ஐயப்பன் திருவீதி உலா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலைச் சோ்ந்த ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 18-ஆ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ராஜபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் மேட்டுப்பட்டித் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீது அவதூறு: ரங்கராஜன் நரசிம்மனுக்கு பிணை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீது அவதூறு கருத்து பரப்பிய விவகாரத்தில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு சிவகாசி நீதிமன்றம் வியாழக்கிழமை பிணை வழங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள முனிகள் மடத்தின் 24- ஆவது... மேலும் பார்க்க